இந்திய அணியில் மீண்டும் தோனி…! பிசிசிஐ-யின் புதிய திட்டம்

புதுடெல்லி ,

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டு நடையை கட்டியது. இந்தியா நிர்ணயித்த 169 ரன் இலக்கை இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது.

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி எதிரணிக்கு நெருக்கடி அளிக்ககூட முடியாமல் சரண் அடைந்தது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் எதிர்பார்த்த அளவு இந்த உலகக்கோப்பை போட்டியில் செயல்படவில்லை. மேலும் உலகக்கோப்பை போட்டியில் மிகவும் நெருக்கடியான தருணங்களில் பெரும்பாலன இந்தியா வீர்ரகள் சரியாக செயல்படுவதில்லை.

இந்திய அணியின் செயல்பாடு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டபடி வசைபாடி வருகிறார்கள். இந்திய அணி வீரர்கள் தைரியமின்றி தயக்கத்துடன் ஆடியதை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.எஸ்.தோனிக்கு இந்திய அணியில் மிகப்பெரிய பொறுப்பை கொடுக்க பிசிசிஐ ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது .

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 வடிவிலான கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால், அவரது பணி சுமை அதிகமாக உள்ளதாக பிசிசிஐ கருதுகிறது..

ஐசிசி போட்டிகளில் அந்த அச்சமற்ற பிராண்ட் கிரிக்கெட்டுக்கான திறனைக் கொண்டு வர, டி20 அணியில் தோனியை இயக்குனராக சேர்ப்பது குறித்து பிசிசிஐ-யில் பேசப்பட்டு வருகிறது .

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் அடிப்படையில், எம்.எஸ். தோனியை டி20 வடிவத்தில் மட்டும் இயக்குனராக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.