பெண்ணின் வாய் வழியாக 4 அடி நீள பாம்பை வெளியே எடுக்கும் மருத்துவர்: வைரல் வீடியோ


பெண் ஒருவரின் வாய் வழியாக 4 அடி நீள பாம்பு ஒன்றை மருத்துவர் ஒருவர் எடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ

பெண்ணின் வயிற்றுக்குள் சென்றுவிட்ட பாம்பு ஒன்றை மருத்துவர் ஒருவர் வெளியே எடுக்கும் காட்சியைக் காட்டும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மருத்துவர் ஒருவர் எண்டோஸ்கோப் என்னும் கருவியின் உதவியால் அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் சென்ற பாம்பை, அவரது வாய் வழியாக எடுப்பதைக் காணலாம்.


அந்த 4 அடி நீள பாம்பைக் கண்டு மருத்துவரே பயந்துவிட்டிருக்கிறார்.

அந்த பாம்பு எப்படி அந்த பெண்ணின் வயிற்றுக்குள் சென்றது?

அந்த பெண் தூங்கும்போது அந்த பாம்பு அவரது வாய் வழியாக அவரது வயிற்றுக்குள் சென்றுவிட்டிருக்கிறது.

இந்த வீடியோ 7,000 ரீட்வீட்களையும், 39,000 லைக்குகளையும் பெற்றுள்ளது.

வீடியோவைப் பார்த்த ஒருவர், அந்த பாம்பு எப்படி ஜீரணமாகாமல் தப்பியது என கேள்வி எழுப்ப, மற்றொருவரோ, ஆஹா, புதிதாக ஒரு பயம் உருவாகியிருக்கிறதே என்கிறார்!
 

பெண்ணின் வாய் வழியாக 4 அடி நீள பாம்பை வெளியே எடுக்கும் மருத்துவர்: வைரல் வீடியோ | Long Snake Removed From Womans Stomach

Photo: Twitter 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.