இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே நம்மில் பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.
இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது.
இதற்காக பலரும் பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது.
எனவே இவற்றை எளிய முறையில் மறைக்க சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 2 டேபிள் ஸ்பூன் வல்லாரை கீரை பொடி சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து, முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசலாம்.
- ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, உருளைக்கிழங்கை நீக்கிவிட்டு, அந்நீரை குளிர வைக்க வேண்டும். பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து, அதை தலைமுடியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி முடியை அலசலாம்.
- சீகைக்காய் பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் முடியை குளிர்ந்த நீரில் ஷாம்பு எதுவும் பயன்படுத்தாமல் அலசலாம்.
- 4 டேபிள் ஸ்பூன் டீத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் நீரை ஊற்றி, அத்துடன் 5-6 துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, அந்நீரால் தலைமுடியை அலசுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நரைமுடி கருமையாக காட்சியளிக்கும்.
- 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, வடிகட்டி ஹென்னா பொடியுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சில மணிநேரம் ஊற வைத்து பின் தலைமுடியில் தேங்காய் எண்ணெயை லேசாக தடவிக் கொண்டு, பின் இந்த ஹென்னா பேஸ்ட்டை தலைமுடியில் தடவி சில மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் நன்கு அலசினால், நரைமுடி கருமையாக மாறும்.
- ப்ளாக் டீ இலைகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு 2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதை மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 40 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலசலாம்.