
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. அதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்ததுள்ளது. மேலும் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டடத்தில் சீர்காழி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாவட்ட ஆட்சியர் லலிதா விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.