12 நாட்கள் ஒரே இடத்தில் வட்டமாக சுற்றிவந்த ஆடுகள்: உலகத்தின் அழிவுக்கு அடையாளமா?

சீனாவில் ஆட்டு மந்தை வைத்திருக்கும் ஒருவருடைய ஆடுகள் சில நடந்துகொண்ட விதத்தைக் கண்ட மக்கள் இது உலகத்தின் அழிவுக்கு அடையாளம் என்று கூறியிருக்கிறார்கள்.

12 நாட்கள் ஒரே இடத்தை வட்டமாக சுற்றிவந்த ஆடுகள்

அவரிடம் ஏராளம் ஆடுகள் உள்ளன. அவற்றை பல மந்தைகளாக அடைத்து வைத்துள்ளார். அவற்றில் சில ஆடுகள் தொடர்ந்து 12 நாட்கள் ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.

உலகத்தின் அழிவுக்கு அடையாளமா?

இந்த காட்சியைக் கண்ட சிலர் இது உலகத்தின் அழிவுக்கு அடையாளம் என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கும் காரணம் உள்ளது. அதாவது, அந்த நபரிடம் பல மந்தைகள் உள்ளன. அவற்றில், மிகச்சரியாக 13ஆம் எண் கொண்ட மந்தைதான் இப்படி சுற்றியுள்ளது. ஏற்கனவே பலர் 13ஆம் எண்ணை பயத்துக்குரிய எண்ணாக பார்க்கும் நிலையில், அதே எண் கொண்ட மந்தை சுற்றி சுற்றி வரவே, அதை உலகத்தின் அழிவு, அல்லது நரகத்தின் வாசலைத் திறப்பதுடன் இணைத்து பயப்படத் துவங்கிவிட்டார்கள் சிலர். 

உண்மையில், இது listeriosis என்னும் ஒரு நோயின் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். காரணம், மூளையை பாதிக்கும் இந்த listeriosis நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் இப்படி ஒரே இடத்தை சுற்றி சுற்றி வருமாம்!
 
12 நாட்கள் ஒரே இடத்தில் வட்டமாக சுற்றிவந்த ஆடுகள்: உலகத்தின் அழிவுக்கு அடையாளமா? | Goats That Went Round In A Circle For 12 Days

Credit: peoples daily

Credit: Jam Press

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.