ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர்..கைப்பற்றப்பட்ட மரண ஆயுதங்கள்


அமெரிக்காவில் ஜெப ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக 22 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க்கில் ஜெப ஆலயங்களுக்கு இருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பொலிஸார், Aquebogue-ஐ சேர்ந்த கிறிஸ்டோபர் பிரவுன்(22) என்பவரையும், மான்ஹாட்டனைச் சேர்ந்த மாத்யூ மஹ்ரர்(22) என்பவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரவுன் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆனால் அவர் சமீபத்தில் நியூயார்க் சென்று துப்பாக்கியை வாங்க ஆர்வமாக இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர்..கைப்பற்றப்பட்ட மரண ஆயுதங்கள் | Two Arrested Who Threats Synagogues Usa

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் ஒரு பெரிய வேட்டைக் கத்தி, ஒரு சட்ட விரோத Glock 17 ரக துப்பாக்கி, 30 சுற்றுகள் கொண்ட தோட்டா மேகசின் மற்றும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து NYPD காவல் ஆணையர் Keechant Sewell ஒரு அறிக்கையில் கூறுகையில், ‘பிரவுன் மற்றும் மற்றொரு நபர் யூத சமூகத்திற்கு விடுவிக்கப்பட்ட அச்சுறுத்தல், மாநில மற்றும் மத்திய சட்ட அமலாக்கத்தால் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர்..கைப்பற்றப்பட்ட மரண ஆயுதங்கள் | Two Arrested Who Threats Synagogues Usa

இந்த நிலையில் பிரவுன் மீது பயங்கரவாத அச்சுறுத்தல், மோசமான துன்புறுத்தல் மற்றும் குற்ற ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மஹ்ரர் மீது குற்றவியல் ஆயுதம் வைத்திருந்ததாக மட்டுமே குற்றம்சாட்டப்பட்டுள்ளது.    

ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர்..கைப்பற்றப்பட்ட மரண ஆயுதங்கள் | Two Arrested Who Threats Synagogues Usa



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.