நடிகை த்ரிஷா வெளியிட்ட வைரல் வீடியோ: கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகி சமீபத்தில் வெளியானது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும் படமானது 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. படத்தில் முக்கிய கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார்.
கல்கி படைத்த குந்தவைக்குரிய ராஜ தந்திரத்தையும், கம்பீரத்தையும் அப்படியே த்ரிஷா திரையில் பிரதிபலித்ததாக ரசிகர்கள் கூறினர். அவர் மட்டுமின்றி படத்தில் நடித்த அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து திரையில் பிரதபலித்தனர் என பெரும்பாலானவர்கள் கூறினர். இப்படி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் அடுத்த பாகம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகை த்ரிஷாவின் போஸ்டரை மழலை குழந்தை கொஞ்சும் அழகான வீடியோ வெளியாகியுள்ளது, மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இந்த வைரல் வீடியோவை நடிகை த்ரிஷாவே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
வீடியோவை இங்கே காண்க:
— Kundavai (@trishtrashers) November 19, 2022
தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக திகழும் த்ரிஷா தமிழில் தி ரோட் & மலையாளத்தில் ராம் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே த்ரிஷா நடிப்பில் தெலுங்கில் பிருந்தா எனும் வெப் சீரிஸும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.