விராட் கோலி முன்னர் ஒருமுறை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவுடன் டேட்டிங் சென்றார் என தெரியவந்துள்ளது.
விராட் கோலி டேட்டிங்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் விராட் கோலி.
இவருக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது.
இதனிடையில் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது திருமணத்திற்கு முன்னர் விராட் கோலியுடன் டேட்டிங் சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது.
அதன்படி கோலியும் – ரித்திகாவும் 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சந்தித்துள்ளனர்.
அதன் பின்னர் 3 ஆண்டுகளாக விராட் கோலியிடம் மேலாளராக ரித்திகா பணிபுரிந்துள்ளார்.
orissapost
வெளிவந்த புகைப்படம்
2013ம் ஆண்டு இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதற்கேற்றார் போல இருவரும் யாருக்கும் தெரியாமல் தனியாக திரைப்படத்திற்கு சென்றுவிட்டு, வெளியே வரும் போது பலரும் புகைப்படம் எடுத்தனர்.
அப்போது ரித்திகா அசௌகரியமாக உணர்ந்த நிலையில் தனது முகத்தை செய்தித்தாளை கொண்டு மூடி கொண்டார்.
இதன்பிறகு ரோகித் சர்மாவிடம் மேலாளராக ரித்திகா சேர்ந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2015ல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.