சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து வந்த 2 டிரோன்கள் மீது இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதுகுறித்து பிஎஸ்எப்(எல்லை பாதுகாப்பு படை) அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாப்பில் உள்ள எல்லை மாவட்டமான குருதாஸ்பூரில் சர்வதேச எல்லைக்கு அருகில் வானில் பறந்த டிரோன் மீது 96 ரவுண்டுகள் சுடப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதால் டிரோன் சென்று விட்டது. அதே போல் அமிர்தசரஸ் மாவட்டத்தில் இருநாடுகளின் எல்லையில் நேற்று ஒரு டிரோன் பறந்தது. பிஎஸ்எப் வீரர்கள் 10 முறை துப்பாக்கியால் சுட்டதில் டிரோன் திரும்பி சென்று விட்டது,’ என்றனர்.