கிஷோர் கே சுவாமி அதிரடி கைது!

பாஜக ஆதரவா வளரும், சமூக ஊடகவியலாளருமான கிஷோர் கே சாமி மழை வெள்ளத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையில் நவம்பர் 1ஆம் தேதி இரவு ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பியது. நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய விசாரணைக்கு ஆஜராகும்படி பல நோட்டீஸ்கள் அனுப்பியும் ஆஜராக இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு நீதிபதி எஸ் அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தபோது கிஷோர் கே சாமி தரப்பில் தனது நண்பரை குறிப்பிட்டு மட்டுமே ட்விட்டரில் பதிவு செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.  காவல்துறை தரப்பில் இதேபோல சமூக ஊடகங்களில் பிறரை துன்புறுத்தும் வகையில் கருத்துக்கள் பதிவிட்டதாக கிஷோர் கே சாமி மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவரும் இதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி அல்லி பிறப்பித்த உத்தரவில் விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பிய நோட்டீசுக்கு ஆஜராகாதவருக்கு முன் ஜாமீன் வழங்கினால், நீதிமன்றம் இந்த சமூகத்திற்கு தவறான தகவலை தெரிவிப்பதாகிவிடும் எனக் கூறி கிஷோர் கேசாமியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டிச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.