உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா..! வெளியிடப்படும் சந்தேகம்


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் யோசனை
நிறைவேற்றப்பட்டாலன்றி, அந்த தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேர்தல்கள்
ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எனவே பெரும்பாலும் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை
நடத்த வேண்டியேற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரதமரால் அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிக்கும்
குழுவை வைத்து கொண்டு தேர்லை பிற்போடும் செயற்பாடு இடம்பெறலாம் என்ற சந்தேகம்
எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா..! வெளியிடப்படும் சந்தேகம் | Election In Sri Lanka

இதனை அரசாங்கம் மறுத்துள்ள போதும், அரசாங்கத்துக்கு தற்போதைய பொருளாதார
நெருக்கடி மற்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவு என்பன இந்த யோசனையை நாடாளுமன்றில்
நிறைவேற்றுவதற்கு துணையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பசில் நாடு திரும்பியதன் நோக்கம்

இதேவேளை பசில் ராஜபக்ச, வரவு செலவுத்திட்டத்தை வெற்றிப் பெறச் செய்வதற்காகவே
நாடு திரும்பியுள்ளார் என்று கூறப்பட்டாலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான
ஆயத்தங்களுக்காகவும் அவரின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அவரின் கட்சி
குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா..! வெளியிடப்படும் சந்தேகம் | Election In Sri Lanka

நாட்டின் இன்றைய நிலவரங்களுக்குள் தேர்தல் ஒன்று வருமாக இருந்தால், நிச்சயமாக
அதில் பொதுஜன பெரமுனவுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே தேர்தலை ஒத்திவைப்பதில் அந்த கட்சி கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளும்
என்றே கருதப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.