மருந்தே நஞ்சாகிப்போகும் பயங்கரம்… சுவிஸ் மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குறித்த ஒரு அதிர்ச்சி செய்தி!


சுவிட்சர்லாந்தில் வாழும் 700,000 மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் ரசாயனம் ஒன்று அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாழும் 700,000 மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் Chlorothalonil என்னும் ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனம், பயிர்களை பூஞ்சைகளிடமிருந்து பாதுகாப்பதற்காகவும், மரக்கட்டைகளை பாதுகாப்பதற்காகவும், சுவர்களில் பூஞ்சை பிடிக்காமல் இருப்பதற்காக பெயிண்ட்களிலும் பயன்படுத்தப்படும் பூஞ்சைக்கொல்லிகளில் காணப்படும் ஒரு ரசாயனமாகும்.

தண்ணீரில் கலக்கும் ரசாயனம்

இதுபோல பயிர்களிலும், மரக்கட்டைகளிலும், வீடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படும் பூஞ்சைக்கொல்லிகளிலுள்ள இந்த Chlorothalonil என்னும் ரசாயனம், தண்ணீரிலும் கலக்கத்தான் செய்யும்.

ஆனாலும், அதற்கும் ஒரு அளவு உள்ளது. உணவுப் பயிர்களைப் பாதுகாப்பதற்காக அதில் நஞ்சை சேர்க்க முடியாது அல்லவா? ஆனால், இந்த ரசாயனம் இப்போது தண்ணீரில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

மருந்தே நஞ்சாகிப்போகும் பயங்கரம்... சுவிஸ் மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குறித்த ஒரு அதிர்ச்சி செய்தி! | Shocking News About The Water Used By Swiss People

Photo by Nithin PA on Pexels.com 

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் ரசாயனம்

சுவிட்சர்லாந்தில் 700,000 மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில், அனுமதிக்கப்பட்ட அளவான 0.1 மைக்ரோகிராமை விட அதிக அளவில் Chlorothalonil என்னும் ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி, சுவிட்சர்லாந்தில் இந்த ரசாயனத்தைப் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டது. ஆனாலும், மண்ணிலும் தண்ணீரிலும் நுழைந்த இந்த ரசாயனம் அப்படியே நிலைக்கிறது.

பிரெஞ்சு மொழி பேசும் Fribourgஇல் மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் 17% அளவிலும், Vaudஇல் 14% அளவிலும் Bernஇல் 10% அளவிலும் இந்த ரசாயன காணப்படுகிறது.

Chlorothalonil என்னும் இந்த ரசாயனம், புற்றுநோயை உருவாக்கலாம் என வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு ரசாயனம் என்பது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.