கடந்த ஒரு வாரத்தில் சென்னை மாநகரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 50 ஆயிரம் பேர் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர்.
இதுவரை 4 கோடி ரூபாய்க்கு மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு, மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க, பல இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அதில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டிய 166 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். மொத்தமாக அன்றைய தினம் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய 217 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய வாகன சோதனையில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக 3 பேர், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 6 பேர் என மொத்தம் 9 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.