10 மாதத்தில் மட்டும் 5.5 கோடி அபராதம்… ஆர்டிஐயில் அம்பலமான டாஸ்மாக் மோசடி!

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களுக்கு MRP விட கூடுதலாக விலையை வைத்து விற்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ரூ. 5 கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் ரூ. 5900, ரூ. 7 கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் ரூ. 8,260, ரூ. 10 கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் ரூ. 11,800 அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் சரக்குகளின் விலை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுவதை தடுக்க ஆய்வு மேற்கொண்டதில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை என 10 மாதங்களில் 29 மாவட்டங்களில் 4,658 விற்பனையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து 5 கோடியே 49 லட்சத்து 64 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கரூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 397 விற்பனையாளர்களிடமிருந்து ரூ. 46 லட்சத்து 84 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு சரக்குரழை விற்கும் விற்பனையாளர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என காசிமாயன் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 29 மாவட்டங்களுக்கு மட்டுமே தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர், அரியலூர், மதுரை (தெற்கு), உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாகவும், அதன் மீது விதிக்கப்பட்ட அபராதங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முறையாக திலளிக்கப்படவி்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் 6000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பீர் மற்றும் ஹாட் என பல்வேறு வகையான சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பலவகை சரக்கு MRPயை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் குறிப்பாக, பீர் ரகங்கள் MRPயை விட 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அவை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படுவதற்கான சேவை கட்டணமாக கூடுதலாக 30 ரூபாய் பெறப்படுவதாகவும், தனியார் பார்களைவிட டாஸ்மாக் கடைகளில் பீர் விலை கிட்டதட்ட 100 ரூபாய் குறைவாக கிடைப்பதால், கூலிங் பீரை 30 ரூபாய் வரை கூடுதலாக கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் மதுப்பிரியர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.