யார் முதலில் போவது? முந்திக்கொள்ள மோதிக்கொண்ட பேருந்துகள்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் நேற்று மதியம் புறப்பட தயாராக இருந்துள்ளது. அப்போது யார் பேருந்தை முதலில் எடுத்து செல்வது என்ற பிரச்சனை இரண்டு தனியார் பஸ் ஓட்டுனருக்குள் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலையே ஆரம்பித்துள்ளது. இரு பேருந்து ஓட்டுனர்களும் பேருந்து எடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு படு வேகமாக தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஒரத்தநாடு அருகே இருவரும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரும்பு கம்பியால் சரமாரி தாக்கிக் கொண்டுள்ளனர். 

இதை கண்ட பயணிகள் பேருந்தை விட்டு அலறி அடித்து ஓடி உள்ளனர். இதை கண்ட சிலர் இருவரையும் விலக்கி விட்டு அனுப்பி வைத்துள்ளனர். கோபம் தலைக்கேறிய இரண்டு ஓட்டுநர்களும் மீண்டும் பேருந்தை வேகமாக எடுத்துக் கொண்டு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரவனந்த தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்து ரிவர்ஸ் எடுத்து வேகமாக நிறுத்தி இருந்த வேறு பேருந்து மீது படு வேகமாக மோதியுள்ளார். 

 

இதில் இரண்டு பேருந்தில் இருந்த கண்ணாடி உடைந்து விட்டது.  தகவல் அறிந்து வந்த வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேருந்தையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்துக்கொண்டு சென்று விட்டார். இரு பேருந்துகள் மோதி கொள்ளும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.