சென்னை : திருவல்லிக்கேணி அரசு மகளிர் பள்ளியின் பின்புற சுற்று சுவர் திடீரென எடுத்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
முதல் கட்ட தகவலின் படி அரசுப் பள்ளியின் இந்த சுற்றுச்சுவர் பழமையான சுற்றுச்சுவர் என்று சொல்லப்படுகிறது. அண்மையில் பெய்த மழை காரணமாக இந்த பழமையான சுற்றுச்சுவரின் ஈரப்பதம் அதிகம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சற்று முன்பு இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 200 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் அருகே கடை வைத்திருந்த நிர்மலா என்ற 40 வயது பெண் பலத்த காயம் ஏற்பட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சுற்றுச்சுவர் விழுந்து விபத்தில் மூன்று கார்கள் சேதம் அடைந்துள்ளது. இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு மினி டெம்போ வாகனமும் சேதமாகியுள்ளது.