வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க இருந்தது.
இருப்பினும் ஜனாதிபதி வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை பெற்று தருவதற்காக அழைப்பு விடுத்துள்ளதினால், வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானம் மேற்கொண்டதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது சிறப்பானது அல்ல என்று சிந்தித்தே வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டபோதே இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.