கண்டசாலா நூற்றாண்டு விழா: சென்னையில் நடக்கிறது

பழம்பெரும் இசை அமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் கண்டசாலாவின் நூற்றாண்டு விழா நடக்கிறது. மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி அமைப்பின் சார்பில் இந்த விழா நடத்தப்படுகிறது. கண்டசாலாவின் மகள் பார்வதி ரவி கண்டாசாலா இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய சுற்றுலா, கலாச்சாரம், வடகிழக்கு பகுதி மேம்பாடு அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி ஆகியோர் டிசம்பர் 4ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் இந்நிகழ்வை துவக்கி வைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் உலகமெங்கிலும் உள்ள பாரம்பரிய நடனக் கலைஞர்கள் காணொளி மூலம் அஞ்சலி செலுத்துவார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த அனைத்து வைகையான பாரம்பரிய நடனங்களும் இடம் பெரும். இந்த நிகழ்ச்சியில் 40 தேசிய விருது பெற்ற கலைஞர்களும், 60 மாநில விருது பெற்ற கலைஞர்களும் பங்குபெறுகிறார்கள்.

100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்டசாலாவின் பாடல்களை பாடுகிறார்கள். இதற்காக பல்வேறு இசை பள்ளிகளில் பயின்ற 200 மாணவர்களில் இருந்து சிறந்த 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பார்வதி ரவி கண்டாசாலா தலைமையில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.