பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு மூன்று பேர் பலி; 11 பேர் படுகாயம்| Dinamalar

பிரேசிலியா,-பிரேசிலில் உள்ள இரண்டு பள்ளிகளில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர்; 11 பேர் படுகாயமடைந்தனர்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இது குறித்து, இந்த மாகாணத்தின் பாதுகாப்பு செயலர் கூறியதாவது:

இந்த மாகாணத்தின் அராக்ரஸ் என்ற நகரத்தில் இரண்டு தனியார் துவக்கப்பள்ளிகள் உள்ளன.

இங்கு நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் இரு பள்ளிகளையும் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

இதில், இருவர் ஆசிரியர்கள், ஒருவர் மாணவர். மேலும் ஒன்பது ஆசிரியர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். மர்ம நபர் குண்டு துளைக்காத ஆடை அணிந்திருப்பது அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகிஉள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து எஸ்பிரிடோ சான்டோ மாகாண கவர்னர் ரெனாட்டோ காசாகிராண்ட் கூறுகையில், ”துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார், ” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.