3 இந்திய வம்சாவளியினரின் துாக்கு தண்டனை உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிங்கப்பூர்,-போதைப் பொருள் கடத்தி வந்த வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இந்திய வம்சாவளியினர் உட்பட நான்கு பேரின் மேல்முறையீட்டு மனுவை, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

latest tamil news

மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான லிங்கேஸ்வரன் ராஜேந்திரன், தட்சிணாமூர்த்தி கட்டையா, சாமிநாதன் செல்வராஜு மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜூமத் முஹமது செய்யது ஆகிய நான்கு பேரும் போதைப்பொருள் கடத்தி வந்ததாக சிங்கப்பூர் போலீசால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிங்கப்பூர் நீதிமன்றம் இவர்களுக்கு 2015ல் துாக்கு தண்டனை விதித்தது.

latest tamil news

இதை எதிர்த்து நான்கு பேரும் 2016 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அவர்கள் நால்வரும் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வலேரி தியன், நான்கு பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.