விருதுநகர்- சிவகாசி சாலையில் விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைப்பு: வாகனஓட்டிகள் மகிழ்ச்சி

சிவகாசி: திருவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி, விருதுநகர், அருப்புகோட்டை, நரிக்குடி, பார்த்தீபனூர் வரையிலான 122 கி.மீட்டர் வரையிலான மாநில நெடுஞ்சாலை, சிவகாசி-விருதுநகர் வரையிலான 27 கி.மீட்டர் சாலை பராமரிப்பு பணிகளும் தனியாரிடம் வழங்க பட்டிருந்தது. சிவகாசி-விருதுநகர் சாலையில் 7 மீட்டர் வரை அகலப்படுத்த பட்டது. அப்போது சிறிதாக இருந்த பல பாலங்களை அகற்றி புதிய பாலங்கள் போடப்படவில்லை. இதனால் சாலையை விட இந்த பாலங்கள் குறுகளாக இருந்து வருகிறது.

சாலையில் பக்கவாட்டில் போடப்பட்டுள்ள எச்சரிக்கை வெள்ளை நிற கோட்டை விட பாலங்கள் குறுகளாக உள்ளது.  இதே போல் சிவகாசி-சாத்தூர் சாலை அகலப்படுத்தி புதிய சாலை போடும் பணிகள் நடைபெற்றது. இதிலும் பல இடங்களில் விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பாலங்கள் பல உள்ளன. இந்நிலையில் தற்போது மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம் போடப்பட்டுள்ள சிவகாசி – ஆர்.ஆர்.நகர், கன்னிசேரி – மத்தியசேனை, சிவகாசி – வெம்பக்கோட்டை ஆகிய சாலைகளில் பாதுகாப்பு சிவப்பு கலர் விளக்கு, எச்சரிக்கை கோடுகள், முக்கிய சந்திப்பு, அபாயகரமான வளைவுகள், பள்ளி, மருத்துவமனை, பாலங்கள், வேகதடை உள்ள இடங்களில் எச்சரிக்கை பதாகைகள், இரவில் ஒளிரும் பாதுகாப்பு விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.

இதே போன்று சிவகாசி-விருதுநகர் சாலையில் வாகன விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான பாலங்களை அகற்றி சாையில் புதிதாக பாதுாகப்பு எச்சரிக்கை போர்டுகள், இரவில் ஒளிரும் லைட்டுகள், பாதுகாப்பு எச்சரிக்கை கோடுகள் அமைத்திட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 21 ம்தேதி தினரனில் செய்தி ெவளியிடப்பட்டது. இந்நிலையில் செய்தி வெளியான 4 நாட்களில் இடிந்த பாலத்தை நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்துள்ளனர். இதே போல் பருவ மழையால் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பல சாலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களை சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.