பிரபல நடிகை கொடுத்த பேச்சுலர் பார்ட்டி… வீடியோ வைரல்!!

நடிகை ஹன்சிகாவுக்கு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கத்தூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனை ஒன்றில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், அவர் தனது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்துள்ள வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

கிரீஸ் நாட்டில் பேச்சிலர் பார்ட்டியை அவர் தனது தோழிகளுடன் கொண்டாடி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் சிறப்பான முறையில் பேச்சிலர் பார்ட்டி நடந்ததாக பதிவில் ஹன்சிகா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.