வரும் 1ம் தேதி அறிமுகமாகிறது டிஜிட்டல் ரூபாய்.. இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

வருகின்ற டிசம்பர் 1-ம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது.

விரைவில் பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, கொடாக் மகேந்திரா வங்கியும் இணையவுள்ளன. மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1-ம் தேதியும், ஆமதாபாத், குவாகத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவிலும் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் நாளை மறுநாள் (டிச.1-ம் தேதி) முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.