வேலைக்காரன் போல் நடத்தினேனா?- வாசிம் அக்ரம் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து சலீம் மாலிக் பதில்

பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான திகழ்ந்தவர் வாசிம் அக்ரம்.தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

56 வயதான வாசிம் அக்ரம் தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளார். வாசிம் அக்ரம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தான் முதன்முதலாக பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆனபோது, அப்போதைய அணி கேப்டன் சலீம் மாலிக் தன்னை வேலைக்காரன் போன்று நடத்தினார். துணிகள் மற்றும் காலணிகளை சுத்தம் செய்ய சொன்னார் எனக் குறிப்பிட்டிருந்தார்.மேலும் சலீம் மாலிக்கை தனது புத்தகத்தில் ‘சுயநலவாதி’, ‘எதிர்மறை எண்ணம் உடையவர்’ என்று அழைத்துள்ள வாசிம் அக்ரம், “என்னுடைய ஜூனியர் அந்தஸ்தைப் பயன்படுத்திக் கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வாசிம் அக்ரமின் குற்றச்சாட்டிற்கு சலீம் மாலிக் பதில் அளித்துள்ளார்.

சலீம் மாலிக் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அவருடைய கருத்துகள் மற்றும் எந்த அர்த்தத்தில் அவர் அதை எழுதினார் என்பதைப் பற்றிய அவரது பார்வையை நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தான் அணி தொடர்களில் விளையாட செல்லும்போது அங்கு சலவை மெசின் பயன்படுத்தப்படும். நாங்கள் யாரும் கைகளால் துணிகளை துவைப்பது கிடையாது. நான் அவரிடம் இதுகுறித்து இன்றும் பேசவில்லை. அந்த புத்தகத்தையும் படிக்கவில்லை.

அதனால் அதுகுறித்து முழுமையாக கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஒரு சகாக்கள். இணைந்து நேரத்தை செலவழித்துள்ளோம். ஆகவே, நான் எந்தவிதமாக சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை. நான் சுயநலவாதியாக இருந்திருந்தால், எனது தலைமையின் கீழ் அவர் எப்படி அறிமுகம் ஆகியிருக்க முடியும்?. நான் ஏன் அவரை பந்து வீச அனுமதிக்க வேண்டும். துணி துவைப்பு, மசாஜ் செய்வது குறித்து அவரை பேசியது, அவர் அவரையே அவமதித்துள்ளார். இதுவரை அவரிடம் பேசவில்லை. எந்த அர்த்தத்தில் அவர் அப்படி எழுதினார் என்பது எனக்குத் தெரியவில்லை.

இவ்வாறு சலீம் மாலிக் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானுக்காக கடந்த 1988 ஆம் ஆண்டில் அறிமுகமான முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் 103 டெஸ்ட் மற்றும் 293 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.