622 வது காலாட் பிரிகேட் படையினர் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் 100 குடும்பங்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் வழங்கல்
62 வது காலாட் படைப்பிரிவின் 622 வது காலட் பிரிகேடின் படையினரின் ஒருங்கிணைப்புடன் வன்னிப் பிரதேசத்தில் கடுமையான பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி நிவாரணம் வழங்கி அந்தக் குடும்பங்களின் பாடசாலை மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்தும் நோக்கில் 100 குடும்பங்களுக்கு பாடசாலை உபகரணங்கள், உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (25) இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட சமூக அடிப்படையிலான வேலைத்திட்டம் நன்கொடையாளர் குழுவினரின் நிதியுதவியுடன் எஹட்டுகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் போது, சுமார் ரூபா.400,000.00 பெறுமதியான 50 பாடசாலை உபகரண பொதிகளும் ரூபா.1,75,000.00 பெறுமதியான 50 உலர் உணவுப் பொதிகளும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டன.
திரு.நதுன் சமரக்கொடியின் அவர்களின் முயற்சியின் கீழ், என்எஸ் பிரபோமன்ஸ் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் (NS Performances Pvt Ltd), கிட்சன் ஹவுஸ் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் (Kitchen House Pvt Ltd) மற்றும் ‘வருணா பார்மசி’ ஆகிய நிறுவனங்களின் நிதியுதுடன் இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் வறுமையான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் பயனாளிகளுக்கு போக்குவரத்து வசதிகளும் வழங்கப்பட்டு மேற்படி பகிர்ந்தளிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
எஹட்டுகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக ரணசிங்க மற்றும் 622 வது காலட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏனோஜ் ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வினை 9 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி அவரது படையினருடன் இணைந்து அதன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இலங்கை இராணுவம்