வேல்ஸ் அணியை மிரட்டிய மார்கஸ் ராஷ்ஃபோர்ட்: வெற்றியுடன் சூப்பர் 16 சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேற்றம்


 உலக கோப்பை கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் சூப்பர் 16 சுற்றில் செனகல் அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது.

ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து 

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு பிரித்தானிய நாடுகள் அஹ்மத் பின் அலி மைதானத்தில் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் சமநிலையில் இருந்த போதிலும், இங்கிலாந்து அணியின் எதிர்ப்பு ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் வேல்ஸ் அணி வீரர்கள் மிகவும் திணறினர்.

வேல்ஸ் அணியை மிரட்டிய மார்கஸ் ராஷ்ஃபோர்ட்: வெற்றியுடன் சூப்பர் 16 சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேற்றம் | Fifa World Cup 22 England Beats Wales Footballfifa.com

இங்கிலாந்து வீரர்கள் தொடர்ச்சியாக வேல்ஸ் அணி வீரர்களின் தடுப்புகளை உடைத்து கொண்டு கோல்களை அடிக்க போராடினார்.
ஆட்டத்தின் முதல் பாதிக்கான 45 நிமிடங்கள் நிறைவடைந்த போது கூடுதல் 6 நிமிடங்கள் போட்டியில் சேர்க்கப்பட்டது.

இருப்பினும் இரண்டு அணிகளும் கோல்கள் சேர்க்க முடியாததை அடுத்து முதல் பாதி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

பட்டைய கிளப்பிய மார்கஸ் ராஷ்ஃபோர்ட்

இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்திலேயே வேல்ஸ் அணியின் கால்பந்து வீரர் அம்பாடு செய்த தவறின் காரணமாக  இங்கிலாந்து அணிக்கு ஃப்ரீ கிக் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்திய மார்கஸ் ராஷ்ஃபோர்ட் இங்கிலாந்து அணிக்காக முதல் கோலை அடித்தார்.

வேல்ஸ் அணி எதிர்கொண்ட இந்த அதிர்ச்சி தாழ்வதற்குள் மற்றொரு இங்கிலாந்து வீரர் பில் ஃபோடன் இரண்டாவது கோலை அடித்து பிரம்மிப்பு அளித்தார்.

இரண்டு கோல்கள் முன்னிலையை இங்கிலாந்து அணி பெற்றவுடன் ஆட்டத்தின் போக்கை இழந்த வேல்ஸ் அணி, எதிர்ப்பு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறியது.

இந்த வாய்ப்பை மீண்டும் பயன்படுத்தி கொண்ட இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் ஆட்டத்தின் 68 நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

வேல்ஸ் அணி பல முயற்சிகள் மேற்கொண்டும் பதிலடி கொடுக்க முடியாத நிலையில், ஆட்டத்தின் இறுதி நேர முடிவில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வெற்றி கொண்டது.

சூப்பர் 16 சுற்று

வேல்ஸ் அணியுடனான வெற்றி மூலம் உலக கோப்பை கால்பந்து தொடரின் சூப்பர் 16 சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.

குரூப் “பி” பிரிவில் இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் சூப்பர் 16 சுற்றில் குரூப் “ஏ” பிரிவில் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து இருக்கும் செனகல் உடன் மோத உள்ளது.

குரூப் பி பிரிவில் 1 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ள வேல்ஸ் கால்பந்து அணி உலக கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறுகிறது.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.