எனது பந்துவீச்சில் விராட் கோலியை தவிர யாராலும் அந்த சிக்சர்களை அடித்திருக்க முடியாது : ஹரிஸ் ரவுப்

புதுடெல்லி,

டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும் இந்த தொடரில் விராட் கோலி 4 அரை சதங்களுடன் 296 ரன்களை எடுத்து டி20 உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா சந்தித்தது. இதில் கோலி பேட்டிங் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது. கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 82 ரன்களை விளாசி இந்தியா ஒரு வரலாற்று வெற்றியை அடைய வழிவகுத்திருந்தார்.கோலியின் இந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்உலக கோப்பையில் ரசிகர்களால் தற்போது வரை பேசி வரும் போட்டி என்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தான்.

145 -150 கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடிய ஹரிஸ் ரவுப் வீசிய 19-வது ஓவரில் விராட் கோலி 2 சிக்சர்களை அடித்தார். அவர் அடித்த சிக்சரை பார்த்து வியந்த அத்தனை பேரும் அதை எப்படி அடித்தார் என்று இப்போதும் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் இது பற்றி ஹரிஸ் ரவுப் பேசியது பின்வருமாறு:

உலகக்கோப்பையில் விளையாடிய விதமே அவருடைய கிளாஸ் ஆகும். அவர் எந்த மாதிரியான ஷாட்களை அடிப்பார் என்று நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக அந்த சிக்சர்களை அவர் அடித்த விதத்தைப் போல் உலகில் வேறு யாரும் என்னுடைய பந்துவீச்சில் அப்படி ஒரு ஷாட் அடித்திருக்க முடியாது. ஒருவேளை தினேஷ் கார்த்திக் அல்லது ஹர்திக் பாண்டியா அந்த சிக்ஸர்களை அடித்திருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன். ஆனால் அது விராட் கோலியின் பேட்டில் இருந்து வந்தது. அவரிடம் வித்தியாசமான கிளாஸ் உள்ளது. என கூறினார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.