விஜய் டிவி பாக்யலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் வில்லியாக வரும் ரேஷ்மாவை தமிழக சீரியல் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு வில்லி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார். இதனால், சீரியல் பார்க்கும் பெண்கள் மத்தியில் அவர் மீது கோபமே இருக்கிறது. இருந்தாலும், நடிப்பைக் கடந்து சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக இருக்கிறார் ரேஷ்மா. இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா பசுபுலெட்டி புகைப்படம் பதிவிடாவிட்டால், அவரது ரசிகர்கள் அவ்வளவு தான். அடுத்த போட்டோ போடும் வரை அவரை டார்ச்சர் செய்துவிடுவார்கள்.
அந்தளவுக்கு ரேஷ்மாவை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் இருக்கின்றனர். மாடர்ன் டிரஸ் முதல் சேலை வரை என அழகழகான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் அவர். அதுவும் ரேஷ்மாவின் கிளாமர் புகைப்படங்கள் எல்லாம் செம வைரல் தான். இது குறித்து ஒரு பேட்டியில் ரேஷ்மாவிடம் கேட்டபோது, நான் கிளாமர் புகைப்படம் பதிவிடுவதில் என்ன தவறு?. யாருக்கும் இல்லாத ஒன்றா என்னிடம் இருக்கிறது என போல்டாக பேட்டியளித்திருந்தார்.
அதுவரை ரேஷ்மாவை தவறாக திட்டி வந்தவர்கள்கூட, அவர் மீதான கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டனர். சரி இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அவருக்கு பதின்பருவத்தில் பையன் இருப்பது எத்தனை பேருக்கும் தெரியும். அவர் பெயர் ராகுல்.
பதின்பருவ ராகுலுக்கு அண்மையில் பிறந்தநாள் வந்துள்ளது. மகனின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடிய ரேஷ்மா, அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸிலும் வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ரேஷ்மாவின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.