
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த ஆண்டு துவங்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. இப்போது நடந்து கொண்டிருக்கும் டிசம்பர் மாதத்தில் சுமார் 14 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. இப்போது நடந்து கொண்டிருக்கும் டிசம்பர் மாதத்தில் சுமார் 14 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான தங்கள் பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அக்டோபர் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:
டிசம்பர் 3, 2022 – சனிக்கிழமை – புனித பிரான்சிஸ் சேவியரின் விழா- கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 4, 2022 – ஞாயிற்று கிழமை
டிசம்பர் 5, 2022 – திங்கட்கிழமை – குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் 2022- குஜராத்தில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 10, 2022 – இரண்டாவது சனிக்கிழமை
டிசம்பர் 11, 2022 – ஞாயிற்று கிழமை
டிசம்பர் 12, 2022 -திங்கட்கிழமை – பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா- மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 18, 2022 – ஞாயிற்று கிழமை

டிசம்பர் 19, 2022 – திங்கட்கிழமை – கோவா விடுதலை நாள்- கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 24, 2022 – நான்காவது சனிக்கிழமை – கிறிஸ்துமஸ் பண்டிகை: மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 25, 2022 – ஞாயிற்று கிழமை
டிசம்பர் 26, 2022 – திங்கட்கிழமை – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்/லோசூங்/நம்சூங் – மிசோரம், சிக்கிம் மற்றும் மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 29, 2022 – வியாழன் – குரு கோவிந்த் சிங் ஜி பிறந்தநாள் – சண்டிகரில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 30, 2022 – வெள்ளிக்கிழமை – யு கியாங் நங்பா (U Kiang Nangbah) – மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 31, 2022 – சனிக்கிழமை – நியூ இயர்ஸ் ஈவ் – மிசோரமில் வங்கிகளுக்கு விடுமுறை