சாம்ராஜ் நகர், சாம்ராஜ் நகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது 1 லிட்டர் பால் கொள்முதல் விலை 28.85 ரூபாயாக உள்ளது. இது, 30.85 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் கால்நடைகள், தோல் நோயால் பாதிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் மூலம் சாதாரண பால் லிட்டருக்கு ௩௯ ரூபாயும், ஸ்பெஷல் பால் லிட்டருக்கு ௪௫ ரூபாயும் விற்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement