
மது அருந்துவதால் மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் உட்பட 7 வகை புற்றுநோய்கள் ஏற்படும் அபாயங்கள் அதிகரிப்பதாக அண்மையில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவு கூறுகிறது.
அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் புற்றுநோய் தடுப்பு நிபுணராக பணியாற்றி வரும் ஆன்ட்ரூ சீடன்பெர்க் என்பவர் அண்மையில் ஆல்கஹால் தொடர்பான ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.
அந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், அமெரிக்காவில் புற்றுநோய்க்கான முக்கிய காரணியாக ஆல்கஹால் உள்ளது. ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இது தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அனைத்து புற்றுநோய்களிலும் 6% மற்றும் அனைத்து புற்றுநோய் இறப்புகளில் 4% ஆல்கஹால் நுகர்வு இருக்கிறது. ஆனாலும் இந்த அபாயத்தை பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இந்த அபாயத்தை அறிந்திருக்கவில்லை.
மது அருந்துதல் மற்றும் புற்றுநோய் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
கேன்சருக்கான ஆபத்து காரணியாக மதுபானம் இருக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை வயதான நபர்களும் கூட வெளிப்படுத்தியுள்ளனர். குறைந்த அளவு மது அருந்தினால் உடலுக்கு நன்மை பயக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அதற்கு மாறாக, ஆல்கஹால் கேன்சன் ஆபத்தை அதிகரிக்கும் என்று வெளியாகியுள்ள ஆய்வு முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆல்கஹாலை விடுவது, அதிகப்படியான ஆல்கஹால் நுகர்வை குறைக்க, கேன்சர் இறப்பு மற்றும் பிற தீவிர உடல்நல கோளாறுகளால் ஏற்படும் இறப்பை குறைக்க பெரிதும் உதவும் என்று ஆய்வு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
newstm.in