தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. இதன் காரணமாக புறநகர் பகுதிகளான மாதவரம், செங்குன்றம், ஆவடி, பூவிருந்தவல்லி ஆகிய இடங்களிலிருந்து ஆந்திரா மாநிலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் கோயம்பேடு சென்று பின்னர் அங்கிருந்து ஆந்திரா மாநிலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்ல ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து காலை 6:45 மணிக்கு புறப்பட்டு செல்லும் பேருந்து மதியம் 12 மணிக்கு நெல்லூர் சென்றடையும்.
அதேபோன்று மாலை 4.45 மணிக்கு நெல்லூரில் இருந்து புறப்படும் பேருந்து இரவு 10.15 மணிக்கு ஆவடியை ஆவடியை வந்தடையும். இந்தப் பேருந்து சேவையை ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான நாசர் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.