தந்தையின் கண் முன்னே ஒரு வயது மகனுக்கு ஏற்பட்ட கோர சம்பவம்: பீதியில் உறைந்த கிராம மக்கள்


மலேசியா அருகே அமைந்துள்ள Borneo தீவில், தந்தை ஒருவர் தமது ஒரு வயது மகனுடன் படகில் சென்ற நிலையில், முதலை ஒன்று தாக்கி குழந்தையை கவ்விச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை கவ்விய முதலை

Borneo தீவில், படகை கரைக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் நிலையில், 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று அவர்களை தாக்கியுள்ளது.
இதில் எதிர்பாராதவிதமாக குழந்தையை கவ்விய முதலை, தண்ணீருக்குள் மாயமானது.

தந்தையின் கண் முன்னே ஒரு வயது மகனுக்கு ஏற்பட்ட கோர சம்பவம்: பீதியில் உறைந்த கிராம மக்கள் | Crocodile That Snatched Baby Eaten Alive

@CEN

அந்த தந்தை தம்மால் இயன்ற அளவுக்கு போராடியும், இறுதியில் காயங்களுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளார்.
தகவலை அடுத்து பகல் 10.30 மணியளவில் அவசர உதவிக் குழுக்கள் சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ஆனால், முதலை கவ்விச் சென்ற குழந்தையை அவர்களால் மீட்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே படுகாயத்துடன் மீட்கப்பட்ட அந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை இறந்திருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பும், கிராம மக்களும் நம்புகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.