சிகார்,:ராஜஸ்தானில் பிரபல தாதா ராஜு தேத், சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த தாதா ராஜுவை, அவருடைய வீட்டு வாசலில் வைத்து நான்கு பேர் சரமாரியாக சுட்டு கொன்றனர்.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ‘ராஜு கொலைக்கு நான் தான் காரணம்’ என, மற்றொரு தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த ரோஹித் கோதரா என்பவர் சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்டுள்ளார்.
பிரபல தாதாக்கள் ஆனந்த்பால் சிங், பல்பீர் பனுடா ஆகியோர் மரணத்துக்கு பழி தீர்க்கவே, இந்த கொலையை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து எஸ்.பி., குன்வர் ராஷ்ட்ரதீப் கூறுகையில், ”தப்பியோடியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. எல்லை பகுதிகள் அடைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement