400க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய போராட்டம்! 2 மாதத்திற்கு பின் முதல் வெற்றி


ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டத்தின் விளைவாக அறநெறி பொலிஸ் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.

மாஷா அமினி

ஈரான் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என மாஷா அமினி(22) என்ற இளம்பெண் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் ஈரானில் பெண்கள் கிளர்த்தெழுந்தனர்.

மாஷா அமினி/Masha Amini

கொதித்தெழுந்த பெண்கள்

நாடு முழுவதும் ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இரண்டு மாதங்களாக நீடித்து வரும் போராட்டத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அதாவது பெண்கள் ஹிஜாப் அணிவதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘அறநெறி பொலிஸ்’ பிரிவை ஈரான் அரசு கலைத்துள்ளது.

இது பெண்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்று கூறப்படுகிறது.   

400க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய போராட்டம்! 2 மாதத்திற்கு பின் முதல் வெற்றி | Morality Police Abolish In Iran After 2 Months

400க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய போராட்டம்! 2 மாதத்திற்கு பின் முதல் வெற்றி | Morality Police Abolish In Iran After 2 Months

@AFP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.