கையை தூக்கிய எடப்பாடி… அதிர்ந்து போன அதிமுக… சேலத்தில் நடந்தது என்ன?

எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் நடந்த நிகழ்வு சர்ச்சையாக மாறியுள்ளது. சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பதவி வகித்து வருபவர் ஏ.வி.ராஜு. இவரது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சேலம் ஸ்டீல் பிளாண்ட் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி சாலையின் இருபுறமும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

சேலத்தில்

இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஏ.வி.ராஜு நூலை வெளியிட்டார். இந்த விழாவில் எடப்பாடியின் ஆதரவாளர்களான கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், செம்மலை, அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். சுயசரிதை புத்தகம் வெளியிட்டதை அடுத்து, பலரும் மேடையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி அருகில் சென்று வணக்கம் தெரிவித்து விட்டு வந்தனர்.

அதிமுக தொண்டருக்கு ஷாக்

அப்போது தொண்டர் ஒருவர் எடப்பாடியிடம் சென்று வணக்கம் கூறி கையை பிடித்து பேச முயன்றார். அதற்கு அவரின் கைகளை தொட முடியாது என்று அப்படியே தனது கைகளை தூக்கிக் கொண்டு சைகையால் உணர்த்தினார். இதனால் அந்த தொண்டர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இது சுற்றியிருந்த கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொண்டர்களை மதிக்காமல் கையை உதறிவிட்ட எடப்பாடி பழனிசாமி என அரசல் புரசலாக பேசத் தொடங்கிவிட்டனர்.

யார் அவர்? ஏன் அப்படி நடந்து கொண்டார்?

யார் அந்த தொண்டர்? அவரை பார்த்ததும் ஏன் கைகளை பிடிக்க அனுமதி மறுத்துவிட்டார்? ஒருவேளை

அணியில் இருந்து வந்தவரா? இல்லை எடப்பாடி அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டாரா? என்றெல்லாம் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் அங்கம் வகித்த முக்கியமான 8 பேர் திமுகவில் உள்ளனர்.

திமுகவிலும் அதிமுக தொண்டன்

அங்கும் அதிமுக தொண்டன் தான் திமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கிறான். அதிமுகவில் இருந்து சென்றவர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள். திமுகவில் விசுவாசம் என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லை. திமுகவில் காலம் முழுவதும் உழைத்தால் கூட பதவி கிடைக்காது. கமிஷன், கலெக்‌ஷன் இவை தான் உள்ளன. இதை யார் செய்து கொடுக்கிறார்களோ? அவர்களுக்கு தான் பதவி கொடுப்பார்கள் என்று கூறினார்.

எம்.ஜி.ஆர் தவிர்க்க முடியாத ஆளுமை

மேலும் பேசுகையில், எம்.ஜி.ஆர் பெயரை சொன்னால் தான் வாக்குகள் கிடைக்கும் என்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அந்த பெயரை பயன்படுத்த தொடங்கிவிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் அதிமுகவில் சேர்ந்து விடும் நிலைகூட வரலாம். திமுக தலைவர் ஸ்டாலின் எம்.ஜி.ஆர் புகழ் பாடுகிறார் என்றால், அது அதிமுகவுக்கு கிடைத்த பெருமை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.