எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டேன்: ராஷ்மிகா வெளிப்படை

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போதைய நிலையில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய்யுடன் அவர் நடித்த வாரிசு திரைப்படம் அடுத்த மாதம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அமிதாப் பச்சனுடன் அவர் இணைந்து நடித்த அவரது முதல் ஹிந்திப்படமான குட்பை வெளியானது. அடுத்ததாக மிஷன் மஞ்சு என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சேனல் ஒன்றில் அவர் பேட்டி அளித்தபோது, நான் அவ்வளவு எளிதில் எனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக என்னால் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. குறிப்பாக கோபம், ஆத்திரம் போன்றவை.. நான் அப்படியே பழகி விட்டேன்.. என் இந்த செயலால் எரிச்சலான என் அம்மா கூட என்னிடம் நீ வாயை திறந்து பேச வேண்டிய நேரம் இது தான் என்று அடிக்கடி கூறுவது உண்டு. அவ்வளவு ஏன் என்னுடைய படப்பிடிப்பில் ஏதாவது சில விஷயங்கள் நடந்தால் கூட நான் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டேன்.

காரணம் பல பேரை ஒன்றிணைத்து நடைபெறும் படப்பிடிப்பில் ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையுடன் இருப்பார்கள். அதேசமயம் படப்பிடிப்பில் என்னுடன் நெருங்கிப்பழகும் எனது குழுவினர் இதையெல்லாம் நான் கவனித்து கேட்பதில்லை என என்னிடமே என்னைப்பற்றி புகார் கூறுவார்கள். நான் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு உன்னைப்போல் எங்களால் இருக்க முடியாது நாங்கள் போய் கேட்கிறோம் என்பார்கள்.. தாராளமாக போய் கேளுங்கள் என அனுப்பி விடுவேன்” என்கிறார் ராஷ்மிகா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.