அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவன் மரணத்திற்கு காரணமாக இருந்த பெண்! அழுத பெற்றோர்.. புதிய முக்கிய தகவல்


அவுஸ்திரேலியாவில் வாகனம் மோதியதில் இலங்கை சிறுவன் உயிரிழந்த நிலையில் அதற்கு காரணமான 90 வயது பெண் மீது இதுவரையில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

அழுத பெற்றோர்

கல்வின் விஜிவீர (17) என்ற 12ஆம் ஆண்டு மாணவர் கடந்த வியாழக்கிழமை சாலையில் சென்ற போது 90 வயது மூதாட்டி ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதையடுத்து அவர் வேனுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார்.

கல்வின் மரணம் அவர் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது. அதிலும் சிங்கப்பூரில் இருந்த போதே கல்வின் சகோதரி ஓவிடிக்கு சகோதரரின் மரண செய்தி சொல்லப்பட்டது.

இதையடுத்து விமானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு பறந்து வந்த அவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அவர் தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார். மீண்டும் கூறுகையில், சிறப்பான வாழ்க்கைக்காக 2008 இல் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தோம்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவன் மரணத்திற்கு காரணமாக இருந்த பெண்! அழுத பெற்றோர்.. புதிய முக்கிய தகவல் | Srilankan Boy Family Australia

7NEWS Australia/ YouTube

சோக சம்பவம்

என் சகோதரர் கல்வினுக்கு பொறியாளர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது.
நான் வீட்டிற்கு வந்து கதவு அருகே நின்ற போது என் அம்மாவும் அப்பாவும் கதறி அழுது கொண்டிருந்தார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையில் 90 வயது மூதாட்டி எப்படி கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டார் என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அவர் மீது எந்தவொரு வழக்குப்பதிவும் இன்னும் செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

Superintendent அதிகாரி ராபர்ட் ரொண்டன் கூறுகையில், இது ஒரு சோகமான சம்பவம்.
விபத்து விசாரணைப் பிரிவு என்ன நடந்தது என்பதை விசாரிக்கிறது என கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவன் மரணத்திற்கு காரணமாக இருந்த பெண்! அழுத பெற்றோர்.. புதிய முக்கிய தகவல் | Srilankan Boy Family Australia

Supplied



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.