எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் போன்றவற்றினால் ,கடற்றொழிலார்கள் தொழில் ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதற்கு தீர்வாக, மில்டன் மோட்டர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழில் முயற்சியாளர்களினால் மின்கலத்தில் இயங்கும் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறித்த மின்கலங்கள் பொருத்தப்பட்ட படகுகளை நேற்று பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் பார்வையிட்டதுடன், இயந்திரங்களிள் செயல் திறனை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.