ஆளுநர்களை மோசமாக விமர்சிப்பவர்களுக்கு தமிழிசை கடும் எச்சரிக்கை!

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில், மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது, “பிரதமர் மோடி ஒரு முடிவு எடுத்தால் அது மக்களுக்கான முடிவாகத்தான் இருக்கும். அதுபோல் அவரிடம் பாடம் கற்றுக்கொண்ட நாங்களும் எடுக்கும் முடிவுகளும் மக்களுக்கான முடிவுகளாகத் தான் இருக்கும்.

இந்திய நாட்டை உலகத்தில் உள்ள நாடுகளுக்கு குருவாக மாற்ற முயற்சி செய்கிறார் நம் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு உதாரணம் தான் இந்தியாவில் தற்போது தடைபெற்று வரும் ஜி 20 மாநாடு.

பிரதமர் மோடி புத்தகத்திற்கு இளையராஜா முகவுரை எழுதியதற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. புத்தகத்தை படிக்காமல் விமர்சிப்பது தவறு. முதலில் புத்தகத்தை படியுங்கள். இணைய விமர்சர்கள் விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல. நாகரீகமாக விமர்சிக்க வேண்டும். இணையதளங்களை திறந்தால் ஆளுநர்களை பற்றியும், என்னை பற்றியும் மோசமாகவும், மரியாதையின்றியும் விமர்சனம் செய்கின்றனர். படிப்பதற்கே கடினமாக உள்ளது.

இணையதளத்தில் மோசமாக என்னை விமர்சனம் செய்தால், ஏன் இப்படி செய்தோம் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆளு அல்லது ஆளுநர்களை வைத்து கெடு என்று சொல்லும் அளவுக்கு, பாஜக ஆட்சிபுரியாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு இணையாக, ஆளுநர்களை வைத்து கொண்டு மத்திய பாஜக அரசு மற்றொரு ஆட்சியை நடத்தி வருவதாக பல்வேறு எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அதிலும் குறிப்பாக திமுக, ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட மாநில கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில், ஆளுநர்களின் கெடுபிடி அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆளுநர்களை கொண்டு மத்திய பாஜக அரசு மாநிலங்களில் இரட்டை ஆட்சி நடத்தி வருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் விதத்தில், தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, மத்திய அரசுக்கு அனுப்பாமல், மாதக்கணக்கில் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்கும் சமீபத்திய சட்ட மசோதாவுககும் ஆளுநர் பொறுமையாக விளக்கம் கேட்டிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.

தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன், மாநில அரச மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு இணையாக ஆளுநர் மாளிகையிலேயே மக்கள் குறைதீர் முகாம்களை நடத்தி வருகிறார்.

மாநில அரசுகளுக்கு இணையாக, ஆளுநர்களின் இத்தகைய செயல்களை பிடிக்காத ஆளுங்கட்சிகளின் அபிமானிகள், ஆளுநர்களை சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிப்பதும், அவர்களை ளுநர் தமிழிசையே எச்சரிக்கும் அளவுக்கு நிலை போய் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.