பொதுவாக பல பெண்கள் இடுப்பு பகுதியில் இருக்கும் அதிகமான கொழுப்பை குறைக்க மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது.
இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது.
எனவே முடிந்தவரை இதனை குறைப்பதே நல்லது. அந்தவகையில் தற்போது இதனை எப்படி குறைக்கலாம் என்பதை பார்ப்போம்.

பயிற்சி
- தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும்.
- இப்படி 25 தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும்.
- இதையும் 25 தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்.
- இந்த இரு பயிற்சிகளை தினமும் வீட்டில் செய்த வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.