FIFA உலகக் கோப்பை: காயத்திலிருந்து மீண்டு வந்து முதல் கோலை அடித்த நெய்மர்!


காயங்கள் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடாமல் இருந்த நெய்மர், இன்று தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கி தனது முதல் கோலை அடித்தார்.

கத்தாரில் இன்று 974 ஸ்டேடியத்தில் நடந்த FIFA உலகக் கோப்பையின் 16-வது ஆட்டத்தில், காயங்களுக்கு பின் பிட்ச்க்குத் திரும்பிய பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், ​​தென் கொரியாவுக்கு எதிராக தனது முதல் கோல் அடித்தார்.

இப்போட்டியில் நெய்மர் அடித்த இந்த கோல் பிரேசிளுக்கான இரண்டாவது கோல் ஆகும். முன்னதாக, ஏழாவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் கோலடித்து கோல் கணக்கைத் தொடங்கினார்.

FIFA உலகக் கோப்பை: காயத்திலிருந்து மீண்டு வந்து முதல் கோலை அடித்த நெய்மர்! | Neymar Scores Brazil Vs South Korea Fifa World CupTwitter @PulseSportsNG

செர்பியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தனது வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால், சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூனுக்கு எதிரான பிரேசிலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது குழு-நிலை ஆட்டங்களைத் தவறவிட்டார்.

காயங்கள் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த நெய்மர், இப்போட்டியில் அணிக்கான இரண்டாவது கோலை 13-ஆவது நிமிடத்தில் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

FIFA உலகக் கோப்பை: காயத்திலிருந்து மீண்டு வந்து முதல் கோலை அடித்த நெய்மர்! | Neymar Scores Brazil Vs South Korea Fifa World CupTwitter @Goal_India

2022 FIFA உலகக் கோப்பையில் இதுவரை நெய்மர் ஆடிய 12 போட்டிகளில் இது ஏழாவது கோலாகும்.

அவர் போட்டிக்கு திரும்பியதும், அவர் ஆட்டத்தில் தனது இருப்பை முத்திரை குத்தி காட்டியுள்ளார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.