திருச்சி மாவட்டத்தில் புகையிலை பொருட்களை கடத்திச் சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் பாலக்கரை கீழப்புதூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள முனி கண்ணன் கோவில் அருகே சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக பாலக்கரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட 33 கிலோ எடை உள்ள புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ரயில் நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் திருவெறும்பூரை சேர்ந்த ஜாங்கிர் உசேன் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், புகையிலைப் பொருட்கள் கடத்திச் சென்றது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.