பாஜக பெண் நிர்வாகியிடம் தொலைபேசியில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக பாஜக தலைமை, திருச்சி சூர்யா சிவா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார்.
பாஜக உடனான உறவை முடித்து கொள்வதாக சூர்யா சிவா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்றினால் மட்டுமே பாஜக வளரும் எனவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ” அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .