கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் தீவிரோ ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நாயுடுபுரம், பாக்கியாபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர்கள் சுற்றுலா பயணிகளிடம் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் பாக்யபுரத்தை சேர்ந்த விஜய்(22) மற்றும் கீழ் பூமி பகுதியை சேர்ந்த முருகன்(47) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வை முதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது சிறையில் அடைத்தனர்.