திருக்கார்த்திகை தீபம்! விளக்கேற்ற சிறந்த நேரம் எது?


பொதுவாக கார்த்திகை மாதம் என்றாலே சிறப்பான மாதமாக கருதப்படுகின்றது.

இதை தீபங்களின் மாதம் என்றும் பலரும் சொல்கின்றனர்.

இறைவனை வழிபடக் கூடிய பல்வேறு வடிவங்களில் விளக்கேற்றி வழிபடும் முறையை வலியுறுத்தும் மாதம் இந்த கார்த்திகை மாதம்.

இந்த வருட கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்கேற்றும் நேரம் மற்றும் விளக்கேற்றும் முறை என்பன பற்றி நாமும் தெரிந்து வைத்து கொள்வோம்.  

திருக்கார்த்திகை தீபம்! விளக்கேற்ற சிறந்த நேரம் எது? | Karthigai Deepam 2022 Date Tithi Time In Tamil

கார்த்திகை தீபம் ஏற்றும் நேரம்

  • டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. 
  •  அதிகாலையிலேயே விளக்கேற்ற முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 6 மணிக்கு முன்பாக விளக்கேற்ற வேண்டும்.
  • காலை, மாலை இரு வேளைகளும் வீட்டில் விளக்கேற்றுவது நல்லது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் விளக்கேற்ற வேண்டும்.

எத்தனை நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும்?  

  • தொடர்ந்து 3 நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும். முதல் நாளான டிசம்பர் 5 ம் திகதி வீடுகளில் ஏற்றப்படும் தீபத்திற்கு பரணி தீபம் என்று பெயர்.
  • இரண்டாவது நாள் திருக்கார்த்திகை தினமான டிசம்பர் 06 ம் திகதி சிவ பெருமானையும், முருகனையும் நினைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
  • மூன்றாவது நாள் டிசம்பர் 07 ம் திகதி ஏற்றப்படும் தீபத்திற்கு பஞ்சராத்திர தீபம் என்று பெயர். இது பெருமாளுக்காக ஏற்றப்படும் தீபம். பெருமாள் கோவில்களில் பஞ்சராத்திர தீப வழிபாடு சிறப்பாக நடத்தப்படும்.  

எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்?

  • குறைந்தபட்சம் 27 என்ற கணக்கில் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும். அதிகபட்சமாக 50, 100 என எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றலாம்

எங்கெல்லாம் தீபம் ஏற்ற வேண்டும் ?

  • வாசல், நிலை வாசல் முதலில் தீபம் ஏற்ற துவங்க வேண்டும்.
  • பிறகு வாசலில் இருந்து ஒரு அகல் விளக்கை எடுத்து வந்து வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும்.
  • அதைத் தொடர்ந்து படுக்கை அறை, வரவேற்பறை, சமையலறை, கழிவறை, கூடம் என அனைத்து இடங்களிலும் முடிந்த வரை தீபம் ஏற்ற வேண்டும்.

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.