வெறும் காய்ச்சல் என கருதிய பிரித்தானியர்… கை, கால்களை இழந்த கொடூரம்: பீதியை ஏற்படுத்தும் Strep A


பிரித்தானியாவில் தந்தை ஒருவர் வெறும் காய்ச்சல் என கருதி சிகிச்சைக்கு தாமதப்படுத்திய நிலையில், Strep A பாதிப்புக்கு தமது கை, கால்களை இழந்துள்ளதுடன், தற்போது அதன் பாதிப்பு அதிகரிப்பதை அறிந்து அச்சம் தெரிவித்துள்ளார்.

உயிர் பிழைக்க வெறும் 3% வாய்ப்புகள்

பிரித்தானியரான அலெக்ஸ் லூயிஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். வெறும் காய்ச்சல் என கருதிய அவர் சிகிச்சைக்கும் தாமதப்படுத்தியுள்ளார்.
ஆனால் திடீரென்று ஒருநாள் சுயநினைவின்றி சுருண்டு விழ, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

வெறும் காய்ச்சல் என கருதிய பிரித்தானியர்... கை, கால்களை இழந்த கொடூரம்: பீதியை ஏற்படுத்தும் Strep A | Strep A And I Lost All Four Limbs

Credit: Solent

பரிசோதித்த மருத்துவர்கள் உயிர் பிழைக்க வெறும் 3% வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளனர்.
2013ல் நடந்த இச்சம்பவத்தை நினைவுகூர்ந்த அலெக்ஸ் லூயிஸ், நவம்பர் 17ம் திகதி தூக்கத்தில் இருந்து விழித்த அவருக்கு கடுமையான உடல் வலி இருந்துள்ளது, மட்டுமின்றி தோலின் நிறம் மாறவும் தொடங்கியது என்றார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சில மணி நேரங்களில் உடல் உறுப்புகள் செயல்படாமல் போக, மருத்துவ முறைப்படி செயல்பட வைத்துள்ளனர்.

மட்டுமின்றி அவருக்கு Strep A பாதிப்பு இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததுடன், அடுத்த சில மாதங்களில் கை, கால்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டதுடன் சிதைந்து போன முகத்திற்கு பிரத்யேக அறுவை சிகிச்சையும் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Strep A பாதிப்புக்கு சிறார்கள்

இருப்பினும், மருத்துவர்கள் கடுமையாக போராடி அலெக்ஸின் உயிரை மீட்டுக்கொடுத்துள்ளனர்.
சமீப வாரங்களில் பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு சிறார்கள் மரணமடையும் செய்தி வருத்தமடைய செய்துள்ளதாக கூறும் அலெக்ஸ், பெற்றோர்கள் கண்டிப்பாக மிகுந்த கவனத்துடன் இருக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

வெறும் காய்ச்சல் என கருதிய பிரித்தானியர்... கை, கால்களை இழந்த கொடூரம்: பீதியை ஏற்படுத்தும் Strep A | Strep A And I Lost All Four Limbs

@thesun

சந்தேகம் என்றால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற பெற்றோர்கள் தயங்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள ஹை வைகோம்பைச் சேர்ந்த 4 வயது முகமது இப்ராஹிம் அலி, மற்றும் பெனார்த்தை சேர்ந்த ஏழு வயது ஹன்னா ரோப் உட்பட பல குழந்தைகள் Strep A பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், ஊரடங்கு அமுலில் இருந்ததால், சிறார்கள் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டதே, தற்போது இந்த Strep A பரவலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஸ்கார்லெட் காய்ச்சல் மற்றும் Strep A தொற்று ஆகியவை பிரித்தானியா முழுவதும் பரவி வருவதால், பல ஆரம்பப் பள்ளிகள் மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.