கொழும்பு : ”யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு, டிசம்பர் 12 முதல் விமான சேவை மீண்டும் துவக்கப்படும்,” என இலங்கையின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறீபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கைக்கு, பிரதான வருவாயை ஈட்டித் தரும் துறையாக சுற்றுலாத் துறை உள்ளது. ஆனால், 2020ல் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, இலங்கையின் சுற்றுலாத் துறையை முடக்கிப் போட்டது. அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தது.
தற்போது, நாட்டின் பொருளாதார நிலைமை மெல்ல மெல்ல சீரடைந்து வரும் நிலையில், ‘கடந்த நவம்பரில் மட்டும் சர்வதேச சுற்றுலா வாயிலாக 656 கோடி ரூபாயும், கடந்த ௧௧ மாதங்களில் 93 ஆயிரத்து 184 கோடி ரூபாயும் வருவாயாகக் கிடைத்துள்ளது’ என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுற்றுலாத் துறையை பழைய நிலைமைக்கு கொண்டுவர, ”மூன்று ஆண்டுகளுக்குப் பின், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு டிசம்பர் ௧௨ முதல் விமான சேவை துவக்கப்படும்,” என, இலங்கை விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறீபாலா டி சில்வா, அந்நாட்டின் பார்லிமென்டில் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement