நான் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இளவரசி டயானா உயிரிழந்திருக்கமாட்டார்: மொடல் பரபரப்பு தகவல்


இளவரசி டயானாவின் காதலரான டோடி அல் பயத் டயானாவுடன் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில், டோடிக்கு வேறொரு காதலி இருந்ததாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருந்த டோடி, அவருக்கு துரோகம் செய்ததாக அந்த முன்னாள் காதலியே தெரிவித்துள்ளார்.


பல பெண்களுடன் பழகிய டோடி

கோடீஸ்வரரான டோடிக்கு பிரபல நடிகைகள் உட்பட பல பெண்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. ஆனால், மொடலான ஆனி (Annie Cardone) என்ற பெண்ணை உருகி உருகிக் காதலித்திருக்கிறார் அவர்.
அதே நேரத்தில் அவர் இளவரசி டயானாவுடனும் பழகிக்கொண்டிருந்திருக்கிறார். அது ஆனிக்கோ, வெளி உலகுக்கோ தெரியாது.
பின்னர் டயானாவும் டோடியும் கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படங்கள் வெளியான பிறகுதான் ஆனிக்கு உண்மை புரிந்திருக்கிறது.

டயானா-டோடி/Diana-Dodi

@AP


கதறிக்கண்ணீர் விட்ட டோடி

இளவரசி டயானாவுடன் டோடி நெருக்கமாக பழகுவதை அறிந்த ஆனி, டோடியுடனான உறவைத் துண்டித்திருக்கிறார். அப்போது ஆனியைத் தேடிவந்த டோடி, தனக்கு இன்னொரு வாய்ப்பு தரும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாராம்.

கண்ணீர் விட்டுக் கதறி, தான் ஆனியை உண்மையாக நேசிப்பதாகவும், தனக்கு இன்னொரு வாய்ப்புத் தரும்படியும் அழுது கதறியும், ஆனி ஒப்புக்கொள்ளவில்லையாம்.
அதற்குப் பிறகு சில மாதங்கள் ஆன நிலையில்தான் டயானாவும் டோடியும் விபத்தொன்றில் கொல்லப்பட்டார்கள்.

ஆனி/Annie

@Louis Wood

ஒருவேளை நான் டோடியை மன்னித்து ஏற்றுக்கொண்டிருந்தால் வரலாறே வேறு மாதிரி இருந்திருக்குமோ என்கிறார் ஆனி.

டோடியை தான் மன்னித்து ஏற்றுக்கொள்ளாததன் வருத்தம் இப்போதும் தனக்கு இருப்பதாகக் கூறும் ஆனி, அப்படி தான் டோடியை ஏற்றுக்கொண்டிருந்தால், அவர் தன்னுடன் இருந்திருப்பார். அவரும் டயானாவும் இன்னமும் உயிருடன் இருந்திருக்கக்கூடும் என்கிறார் ஆனி. 

நான் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இளவரசி டயானா உயிரிழந்திருக்கமாட்டார்: மொடல் பரபரப்பு தகவல் | Model Said Diana Would Not Death Bcoz Her Decision

Jerry Hinkle



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.