புயல், கனமழை எச்சரிக்கை… மாநகராட்சி அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

மாநகராட்சியின் சுற்றறிக்கையில், ‘ வங்கக் கடலில் உருவாகும் மாண்டஸ் புயல் மற்றும் கனமழையால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள நாளை முதல் (டிசம்பர் 8) டிசம்பர் 10 ஆம் தேதி வரை, மாநகராட்சியின் பல்வேறு துறை களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டு்ப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.

அனைத்து வார்டுகளிலும் மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதையும், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பதையும் மண்டல அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.. லை ஓரங்களில் வலுவற்ற நிலையில் இருக்கும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளையும் (டிசம்பர் 8), சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாளும் (டிசம்பர் 9) கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர்.ராமசந்திரன் விரிவான அறிக்க வெளியிட்டிருந்தார்.

அதில் ‘,கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் அலைச் சீற்றம் குறித்த எச்சரிக்ககை: அத்துடன், ‘வட கடலோர மாவட்டங்கள் (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை), தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் 8-12-2022 இரவு 11.30 மணி வரை 2.8 மீட்டர் முதல் 4.8 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும் என்பதால், மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் படி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், தென் கடலோர மாவட்டங்கள் (இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி), தமிழகத்தின் தென்கடலோர பகுதிகளில் 8-12-2022 இரவு 11.30 மணி வரை, 2.7 மீட்டர் முதல் 3.6 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும் என்பதால், மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் படி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயல் சின்னம் தொடர்பாக நேற்று (6-12-2022) ஒன்றிய அரசின் அமைச்சரவைச் செயலாளர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழக அரசின் தயார் நிலை குறித்தும் எடுத்துரைத்தார்’ என அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.